கள்ளழகர் இறங்கும் நிகழ்விற்காக வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

J.Durai

சனி, 20 ஏப்ரல் 2024 (11:13 IST)
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகைஆற்றில் இறங்கும் நிகழ்வு 
வருகிற 23ஆம் தேதி நடைபெறுகிறது 
 
இதற்காக தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள வைகை அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
 
இன்றிலிருந்து வருகிற 23ஆம் தேதி வரை மொத்தம் 216 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்படும் என்று வைகை பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். 
 
அணையில் உள்ள நீர்மின்நிலையம் வழியாக ஆற்றில் திறக்கப்பட்டுள்ள தண்ணீர் மதுரையை விரைவில் சென்றடையும் வகையில் வினாடிக்கு ஆயிரம் கன அடி வீதம் தண்ணீரை வைகை பொதுப்பணித்துறையினர் திறந்து வைத்தனர்.
 
மொத்தம் 71 அடி உயரம் கொண்ட வைகை அணை தற்போதைய நிலவரப்படி  59.17 அடியாகவும் அணையில் நீர் இருப்பு 3454 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்