நிதிஷ்குமார் வராததால் கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்..!

செவ்வாய், 20 ஜூன் 2023 (15:49 IST)
திருவாரூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை  திறக்க பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் வருகை தர உள்ளார் என்று செய்திகள் நிலையான நிலைகள் திடீரென அவர் தமிழக பயணத்தை ரத்து செய்துவிட்டார். 
 
பீகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவரது தமிழக வருகை ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திட்டமிட்டபடி இன்று கலைஞர் கோட்டத்தை திறந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஏற்கனவே கலைஞர் நூற்றாண்டு விழா மருத்துவமனையை திறக்க ஜனாதிபதி திரௌபதி முர்மு வருவதாக இருந்தது என்பதும் அதன் பின்னர் அவரது வருகை ரத்து செய்யப்பட்டதை அடுத்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களே அந்த மருத்துவமனையை திறந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்