கச்சத்தீவு திருவிழா புறக்கணிப்பு. காலவரையற்ற போராட்டம்: மீனவர்கள் அதிரடி முடிவு!

Mahendran

சனி, 17 பிப்ரவரி 2024 (10:29 IST)
தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்க தமிழக மீனவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக எல்லை தாண்டி தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதாக இலங்கை கடற்படையினர் கைது செய்து வருகின்றனர் என்பதும் அவர்களுடைய படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு வலைகள் சேதப்படுத்தப்பட்டு வருகிறது என்றும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து மத்திய மாநில அரசு நடவடிக்கை எடுத்தும் இலங்கை கடற்படை அட்டகாசம் தொடர்ந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்வதை கண்டித்து கச்சத்தீவு திருவிழாவை இந்த ஆண்டு புறக்கணிக்க மீனவர்கள் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து காலவரையற்ற போராட்டம் நடத்தவும் ராமேஸ்வரத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மீனவர்கள் சங்கத்தின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்