பாஜகவின் தேர்தல் அறிக்கை ஒரு தேராத அறிக்கை.. திராவிட கழக தலைவர் கி.வீரமணி

Siva

ஞாயிறு, 14 ஏப்ரல் 2024 (13:17 IST)
பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியாகி உள்ள நிலையில் அதில் ஒரே நாடு ஒரே தேர்தல் உள்பட பல முக்கிய அம்சங்கள் இருந்தது என்பதை சற்று முன் பார்த்தோம். இந்த நிலையில் பாஜகவின் தேர்தல் அறிக்கை ஒரு தேராத அறிக்கை இன்று திராவிடர் கழக தலைவர் கி வீரமணி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மீண்டும் மோடி ஆட்சி வரக்கூடாது என்றும் அவ்வாறு வந்தால் சமத்துவம் சமூக நீதி, ஆகியவை குழி தோண்டி புதைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மீண்டும் மோடி ஆட்சி ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் இந்தியா கூட்டணியினர் இணைந்துள்ளனர் என்றும் அந்த கூட்டணிக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அம்பேத்கரின் கனவு நனவாகும் என்றும் இந்தியா வளர்ச்சி பாதைக்கு செல்லும் என்றும் தெரிவித்தார்

பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை தயாராக அறிக்கை என்றும் அதில் மத வெறி சாதி வெறி பதவி வெறி ஆகியவை தான் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்