25 வருடமாக தோல்வியே பார்க்காத நான் தோற்றது பாஜகவால் தான்: ஜெயகுமார்

Siva

ஞாயிறு, 14 ஏப்ரல் 2024 (12:49 IST)
25 வருடமாக ராயபுரம் தொகுதியில் தோல்வியை சந்திக்காத நான் கடந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தேன் என்றால் அதற்கு முழு காரணம் பாஜக தான் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது அதிமுகவுக்கு தேவையில்லாத வேஸ்ட் லக்கேஜ் பாஜக என்றும் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தான் அதிமுக ஆட்சியை இழந்தது என்றும் தெரிவித்தார்.

ராயபுரம் தொகுதியில் தோல்வி அடையாமல் கடந்த 25 வருடங்களாக நான் முடி சூடா மன்னனாக இருந்தேன் என்றும் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தான் நான் தோல்வி அடைந்தேன் என்றும் தெரிவித்தார்.

ராயபுரம் தொகுதியில் 40 ஆயிரம் சிறுபான்மையினர் ஓட்டுகள் இருக்கிறது என்றும் அவர்கள் என்னிடமே பாஜகவிடம் கூட்டணி வைக்க வேண்டாம் என்று சொன்னார்கள் என்றும் கவலைப்பட வேண்டாம் தகுந்த சமயம் வரும்போது கழட்டி விடுவோம் என்று அவர்களிடம் வாக்குறுதி அளித்திருந்தேன் என்றும் அதன்படி தற்போது அந்த வேஸ்ட் லக்கேஜை கழட்டி விட்டாச்சு என்றும் ஜெயக்குமார் பேசி உள்ளார்.

ஜெயக்குமாரின் இந்த பேச்சுக்கு பாஜக தரப்பில் இருந்து என்ன பதிலடி வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்