இந்நிலையில் பணி முடிந்து லிப்டில் வரும்போது லாவண்யாவை ஆடிட்டர் ராபர்ட் வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து லாவண்யா திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ராபர்ட்மீது புகார் அளித்ததையடுத்து விசாரணக்கு ஆஜரான நிலையில் மீண்டும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்து ராபர்ட் வந்தார்.
அப்போது அங்கு ராபர்ட்டை காவல் நிலைய வாசலில் வைத்து லாவண்யாவின் சகோதரர் மௌலி என்பவர் தலை கழுத்து ஆகிய இடங்களில் 3 முறை பலமாக தாக்கியுள்ளார். ஏற்கனவே ராபர்ட்டுக்கு முதுகுத்தண்டில் பிரச்சனை ஏற்பட்டு ஆபரேஷன் செய்த நிலையில் லாவண்யாவின் தம்பி மௌலி தாக்கியதில் அனைத்து மகளிர் காவல் நிலைய வாசலிலேயே சுருண்டு விழுந்து ராபர்ட் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து லாவண்யாவின் தம்பி மௌலியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.