மிக மோசமான நிலையில் தேசிய நெடுஞ்சாலை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (16:58 IST)
மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை மிக மோசமான நிலையில் உள்ள நிலையில் இதுகுறித்து பதிலளிக்க தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவு பிறப்பித்துள்ளது
 
ஒரே இடத்தில் 14 விபத்துக்கள் நடந்துள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைகிளை வருத்தம் தெரிவித்த நிலையில் சாலைகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை முறையாக பராமரிப்பதில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
 
சுங்கக்கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கில் தேசிய நெடுஞ்சாலை துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள நீதிபதிகள் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூல் செய்வதில் மட்டுமே சுங்கச்சாவடிகள் மும்முரமாக உள்ளதாக அதிருப்தி தெரிவித்தனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்