கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், விசாரணை குழு அமைக்கப்பட்டு, அறிக்கைதாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.
அதன்பின், ஜெயலலிதாவின், உறவினர்கள், அதிகாரிகள், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், 5 ஆண்டுகள் விசாரணைக்குப் பின் இந்த அறிக்கை நாளை தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகிறது., 600 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை நாளை காலை 10:30 மணிக்கு ஆறுமுகசாமி தனது அறிக்கையை முதல்வர் ஸ்டாலிடம் தாக்கல் செய்கிறார்.