மக்களால் நான், மக்களுக்காக நான். எனக்கென்று குடும்பம் கிடையாது என கூறியவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா. ஆனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரது அண்ணன் மகள் தீபா, எனது அத்தை ஜெயலலிதாவை பார்க்க விடாமல் தடுக்கிறார் சசிகலா என கூறினார்.
மேலும் கூறிய அம்ருதா, முன்னர் சசிகலா ஜெயலலிதா அம்மாவுடன் இல்லாதபோது ஜெயலலிதா அம்மாவை நான் நேரில் சந்தித்து பேசி இருக்கிறேன். அப்போது அவர் எனது குடும்பத்தை பற்றி அன்போடு விசாரித்தார். ஆனால் அவரை பற்றி நான் விசாரித்த போது அவர் கண்ணீர் வடித்தார் என தெரிவித்தார்.