சசிகலா குடும்ப சொத்து பட்டியலை வருமான வரித்துறையிடம் கொடுத்தது யார்??

புதன், 15 நவம்பர் 2017 (17:55 IST)
இந்தியாவின் மிகப்பெரிய வருமான வரித்துறை சோதனையை சசிகலா குடும்பத்தை குறிவைத்து வருமான வரித்துறை நடத்தி முடித்துள்ளது. 


 
 
சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்துக்கள் குறித்த விவரம் தமிழகத்தை சேர்ந்த ஒரு முக்கிய பிரமுகர் கொடுத்தாக தெரிகிறது. 
 
அந்த பட்டியலின் அடிப்படையிலேயே சோதனை நடத்தப்பட்டதாக வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சோதனையில், ஏராளமான தங்கம் மற்றும் வைர நகைகள், கட்டுக்கட்டாக பணம், ரூ.1500 கோடிக்கும் மேல் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. 
 
இந்நிலையில், இந்த பட்டியலை கொடுத்ததே முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் என்று தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
சசிகலா குடும்பத்தின் ஆதிக்கத்தை அடக்க எடப்பாடி பழனிசாமி, கடந்த 3 மாதங்களுக்கு முன்பே இந்த பட்டியலை தயார் செய்து வருமான வரித்துறைக்கு கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்