ஜெயலலிதாவுக்கு தங்கை இருக்கிறார் அவருக்கு ஒரு மகளும் இருக்கிறார்!

செவ்வாய், 13 டிசம்பர் 2016 (15:10 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது இறுதிச்சடங்கு முழுவதையும் அவரது தோழி சசிகலா தான் செய்தார்.


 
 
ஜெயலலிதாவுக்கு யாரும் இல்லை, அவர் ஒரு தனி மரம் என கூறப்பட்டது. ஆனால் அவருடைய அண்ணன் மகள் தீபா சமீப காலமாக ஊடகங்களில் ஜெயலலிதா மரணம் குறித்து கேள்வி எழுப்பி வருகிறார். அவருடைய சகோதரர் தீபக் ஜெயலலிதாவின் இறுதி சடங்கின் போது பேருக்கு பயன்படுத்தப்பட்டார்.
 
ஆனால் தற்போது ஜெயலலிதாவுக்கு தங்கை இருக்கிறார் அவருக்கு அம்ருதா என்ற மகளும் இருக்கிறார் என தெரியவந்துள்ளது. ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமனின் முதல் மனைவியின் மகளின் மகள் தான் இந்த அம்ருதா. இவர் தற்போது ஜெயலலிதாவின் மரணம் குறித்து சந்தேகங்களை எழுப்பியுள்ளார்.
 
ஜெயலலிதாவை தான் சந்தித்துள்ளதாகவும். சில நேரங்களில் சசிகலா தன்னை ஜெயலலிதாவை சந்திக்க அனுமதிக்கவில்லை எனவும். ஜெயலலிதாவை சந்திப்பதை தடுத்ததாகவும் இவர் குற்றம்சாட்டியுள்ளார். ஜெயலலிதாவின் இரத்த உறவான அம்ருதா தற்போது கர்நாடகாவில் உள்ளார். அங்குள்ள ஊடகங்கள் ஜெயலலிதாவின் குடும்பத்தினரை சந்தித்து பேட்டி எடுத்து வருகின்றன. ஜெயலலிதா எப்பொழுதுமே தனது குடும்பம் பற்றிய தகவலை கூறுவதற்கு விருப்பம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்