ஜெயலலிதா மரணத்தின் நீதி விசாரணை: சிறையில் சசிகலாவின் ரியாக்‌ஷன்?

சனி, 19 ஆகஸ்ட் 2017 (10:31 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த வருடம் டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். ஆனால் அவரது மரணத்தில் உள்ள மர்மம் இன்னமும் தெளிவாகவில்லை. இதனையடுத்து பல்வேறு தரப்பினர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த கோரிக்கை வைத்துவந்தனர்.


 
 
இந்நிலையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என கூறினார். மேலும் ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ் கார்டன் வேதா நிலையம் அவரது நினைவிடமாக அரசு சார்பில் மாற்றப்படும் என அறிவித்தார்.
 
இந்த இரு அறிவிப்புகளும் சசிகலா குடும்பத்துக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. இந்நிலையில் சசிகலாவின் பிறந்தநாளையொட்டி அவரை நேற்று தினகரன் உள்ளிட்ட குடும்பத்தினர் சிறையில் சென்று சந்தித்தனர்.
 
இந்த சந்திப்பின் போது எடப்பாடி பழனிச்சாமி ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க நீதி விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது பற்றி தினகரன் சசிகலாவிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சசிகலா பின்னர் நீதி விசாரணைதானே வெச்சிட்டுப் போகட்டும். இதனால நமக்கு எதிரா ஒன்னும் நடக்கப்போறதில்லை என கூறியதாக தகவல் வருகிறது.
 
நாம தான் ஜெயலலிதாவை கொலை செஞ்சுட்டதா எல்லாரும் பேசிட்டு இருக்காங்க. இந்த விசாரணையில அவரது மரணத்தில எந்த மர்மமும் இல்லைன்னு சொல்லிட்டாங்கன்னா நம்ம மேல இருக்கிற சந்தேகம் தீர்ந்துவிடும். நாம எதுவும் செய்ய வேண்டாம் அவங்க நீதிவிசாரணை நடத்தட்டும். 
 
அதே மாதிரி வேதா நிலையத்தை நினைவிடமா மாத்துனா மாத்தட்டும் நாம அதை வச்சு ஓன்னும் செய்யப்போறது இல்லை. முக்கியமான திங்க்ஸ் எதுவும் அங்க இல்லை அதனால போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமா மாத்துறதுல நாம தலையிட வேண்டாம். முறைப்படி அவங்க அதை செய்யட்டும் என்றாராம் சசிகலா.

வெப்துனியாவைப் படிக்கவும்