சட்டசபை கூட்டத்தின் முதல் நாளான இன்று, திமுக பொருளாலர் ஸ்டாலினும், முதலமைச்சர் ஜெயலலிதாவும் பரஸ்பர வணக்கம் தெரிவித்துக் கொண்டார்கள்.
அதை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் 10.48 மணிக்கு சட்டசபைக்கு வந்தார். அவர் உள்ளே நுழைந்ததும், திமுக எம்.எல்.ஏக்கள் உற்சாக மிகுதியில் மேஜையை தட்டி தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். ஜெயலலிதா 10.52 மணிக்கு வந்தார். அவரை அதிமுக எம்.எல்.ஏக்கள் மேஜையை தட்டி வரவேற்றனர்.
அப்போது ஜெயலலிதா அங்கிருந்த அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு தனது இருக்கையில் அமர்ந்தார். அப்போது அவருக்கு நேர் எதிராக அமர்ந்திருந்த எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின், ஜெ.விற்கு வணக்கம் கூறினார். அதற்கு ஜெயலலிதாவும் பதிலுக்கு ஸ்டாலினுக்கு வணக்கம் தெரிவித்தார்.