தேர்தலில் நின்று வெற்றி பெற்ற பின், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, முதல்வராக வர வேண்டும் என ஜெ.வின் தோழி கீதா கருத்து தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏ கூட்டத்தில், சட்டமன்றக் கட்சித் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், அவரே முதல்வராக வேண்டும் என தற்போதைய தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முன்மொழிந்தார். மேலும், தனது ராஜினாமா கடிதத்தையும் அவர் ஆளுநருக்கு அனுப்பியுள்ளார். வருகிற 9ம் தேதி தமிழகத்தின் முதல்வராக சசிகலா பதவியேற்பார் எனக்கூறப்படுகிறது.
ஆனால், சசிகலா முதல்வராவதற்கு பலத்த எதிப்பு கிளம்பி வருகிறது. மு.க.ஸ்டாலின், கனிமொழி, ராமதாஸ், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பலர் அவருக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தொடக்கம் முதல் சசிகலாவிற்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் ஜெ.வின் தோழி கீதா, சசிகலா முதல்வராவது குறித்து கருத்து தெரிவித்த போது “ இப்போது சசிகலா முதல்வராக வேண்டிய அவசியம் என்ன? அவசரம் என்ன?. அவரை மக்கள் ஏற்றுக் கொண்டதாக கூறுகிறார்கள். அப்படியெனில் தேர்தலில் நின்று வெற்றி பெற்ற பின்பே அவர் முதல்வராக வரவேண்டும். அவரால் முடிந்தால் ஆர்.கே.நகர் தொகுதியில் நின்று வெற்றி பெறட்டும்” என சவால் விடுத்தார்.