நாஞ்சில் சம்பத் தந்தை மரணம் : ஜெயலலிதா இரங்கல்

ஞாயிறு, 24 ஜூலை 2016 (19:34 IST)
அதிமுக கட்சியை சேர்ந்த நாஞ்சில் சம்பத்தின் தந்தை மறைவிற்கு தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.


 

 
அவர் வெளியிட்டுள்ள இரங்கள் செய்தியில் “ அ.தி.மு.க. செய்தித் தொடர்புக் குழு உறுப்பினர் நாஞ்சில் சம்பத்தின் தந்தை பாஸ்கர் பணிக்கர் உடல் நலக் குறைவால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன். 
 
தந்தையை இழந்து வாடும் நாஞ்சில் சம்பத்துக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்