உடைப்பட்ட அதிமுகவால் அனாதையாக விடப்பட்ட ஜெயலலிதா சமாதி!!

வியாழன், 16 பிப்ரவரி 2017 (12:14 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கட்டிக்காத்த கட்சி அ.தி.மு.க. அவரது மறைவுக்கு பின்னர் கட்சியில் பல்வேறு அதிரடி மாற்றாங்கள் மற்றும் குழப்பங்கள் நீடித்து வருகிறது. 


 
 
ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் இவை அனைத்தும் நடந்திருக்குமா என்ற எண்ணம் மக்களிடம் தோன்றியுள்ளது. 
 
ஜெயலலிதாவை அ.தி.மு.க. மதிக்க தவறிவிட்டது. இதற்கு உதாரணம் தினமும் கட்சி நிர்வாகிகள் பூக்களால் ஜெயலிதாவின் சமாதியை அலங்கரிப்பார்கள். 
 
ஆனால் தற்போது ஜெயலலிதா சமாதி எந்த பராமரிப்பும் இல்லாமல் காணப்படுகிறது. நேற்று சசிகலா ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்ற போதும் அங்கு காய்ந்த பூக்களே காணப்பட்டன. தொண்டர்கள் அன்பின் காரண்மாக கொண்டு வரும் பூக்கள் மட்டும் ஜெயலலிதாவின் சமாதியில் தூவப்படுகிறது. மேலும், அவரது சமாதியில் எப்போது ஒலித்துக் கொண்டிருக்கும் வானமே இடிந்தது அம்மா... வாழ்வே முடிந்தது அம்மா... என்ற பாடலும் நிறுத்தப்பட்டுள்ளது.
 
இதை தவிர்த்து ஜெயலலிதா சமாதியில் நினைவு மண்டபம் கட்டப்படும், அதற்கு அம்மா நினைவகம் என பெயர் வைக்கப்படும், மக்களால் நான் மக்களுக்காக நான் என்ற ஜெயலலிதாவின் கம்பீர வாசகம் பொறிக்கப்படும், இவை அனைத்தும் ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று திறந்து வைக்கப்படும் என கூறப்பட்டது.
 
நினைவகத்தின் மாதிரி வடிவமும் டிசைன் செய்யப்பட்டு வளைதளங்களில் வெளியானது. ஆனால் கட்சி மற்றும் ஆட்சியை ஆள அதிமுகவில் போட்டி போட்டுக்கொண்டு அவர்கள் அனைவரும் ஜெயலலிதாவை மதிக்க தவறிவிட்டனர் என்று தான் நினைக்க தோன்றுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்