தினகரன் விரைவில் சிறைக்கு செல்வார் - ஜெயக்குமார் பேட்டி

செவ்வாய், 23 ஜனவரி 2018 (13:35 IST)
ஆர்.கே.நகர் தொகுதி எம்.ல்.ஏ டிடிவி தினகரன் சிறைக்கு செல்லும் நேரம் வந்து விட்டது என அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார்.

 
கடந்த 20ம் தேதி முதல் தமிழக அரசு பேருந்து கட்டணத்தை திடீரென உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது. இதனால், சென்னை போன்ற பெரிய நகரங்கள் மட்டுமின்றி, சிறு கிராமங்கள் மற்றும் நகரங்களில் பேருந்துகளை பயன்படுத்தும் சாதாரண பொதுமக்கள், இதற்கு முன் செலுத்தியதை விட இரண்டு மடங்கு தொகை கொடுக்க வேண்டியுள்ளது.  
 
சரியான முன்னறிவிப்பின்றி இப்படி அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தியது தவறு எனவும், இதனால், தாங்கள் மிகுந்து சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும், இந்த கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர். ஆனால், விலை ஏற்றத்தை திரும்ப பெற முடியாது என தமிழக அரசு கைவிரித்து விட்டது.
 
அந்நிலையில், பேருந்து கட்டண உயர்வை திரும்பி பெற வேண்டும் என டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்திருந்தார். அதில், எம்.எல்.ஏ.க்களுக்கான சம்பள உயர்வை நான் பெறப்போவதில்லை, எம்.எல்.ஏ.க்கள் மட்டும் தமிழக பிரஜைகள் போலவும், பொதுமக்கள் இந்த அரசுக்கு தேவையற்றவர்கள் போலவும் ஆட்சியாளர்கள் நடந்து கொள்கின்றனர் என புகார் கூறியிருந்தார். 
 
இந்நிலையில் இதுபற்றி பேட்டியளித்த ஜெயக்குமார் “பேருந்து கட்டணத்தை மீண்டும் குறைக்க முடியாது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.  டிடிவி தினகரன் சிறைக்கு செல்லும் நேரம் நெருங்கி விட்டது” என அவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்