தமிழகத்தில் மீண்டும் கனமழை - வானிலை மையம் அறிவிப்பு

வியாழன், 14 டிசம்பர் 2017 (11:17 IST)
வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

 
வங்கக்கடலில் சமீபத்தில் உருவான ஓக்கி புயல் காரணமாக, கன்னியாகுமாரி மாவட்டம் பெரும் பாதிப்பை சந்தித்தது. கடலுக்கு சென்ற பல மீனவர்கள் மாயமானார்கள். பலரின் படகுகள் காற்றில் இழுத்து செல்லப்பட்டு அருகிலுள்ள மாநிலங்களில் தஞ்சம் அடைந்தனர். பலர் கடலில் மூழ்கி இறந்தனர்.
 
கன்னியாகுமரி கடற்பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தென்  தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்னும் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்