அவர்கள் வீடு மட்டுமில்லாமல் பிரபல வைர வியாபாரி கீர்த்திலால் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவர் சேதுராமன் வீடு மற்றும் அலுவலகம் உட்பட மொத்தம் 40 இடங்களில் இன்று, வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, மதுரை, திண்டுக்கல், கோவை ஆகிய இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
இதில் முக்கியமாக, திண்டுக்கல் மாவட்டம் வேம்பார் பட்டியில் உள்ள, முன்னாள் அமைச்சர் விஸ்வநாதனினின் வீடு, மதுரையில் உள்ள வீடு, அலுவலகங்கள் மற்றும் அவரின் உறவினர், நண்பர்களின் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.