அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் 4வது நாளாக தொடரும் சோதனை.! நாளையும் தொடரும் என தகவல்..!

திங்கள், 6 நவம்பர் 2023 (07:19 IST)
தமிழக அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் கடந்த மூன்று நாட்களாக வருமானவரி துறையினர் சோதனை செய்து வரும் நிலையில் இன்று நான்காவது நாளாகவும் சோதனை தொடர்வதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
 
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை சமீபத்தில் தொடங்கியது.  சென்னை திருவண்ணாமலை உள்பட பல இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வரும் நிலையில் வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் இன்று நான்காவது நாளாகவும் வருமானவரி சோதனை நடைபெற்று வருவதாகவும் அவருக்கு சொந்தமான வீடு கல்வி நிறுவனங்கள் மருத்துவக் கல்லூரி ஆகிய இடங்களில் தற்போது சோதனை நடத்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த சோதனை நாளை வரை நடைபெறும் என்று கூறப்படுகிறது. 
 
இதுவரை நடைபெற்ற சோதனையில் என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது எங்களது குறித்த தகவலை வருமானவரித்துறை வெளியிடவில்லை என்றாலும் முழுமையாக சோதனை முடிந்த பிறகு வெளியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்