இது எங்கள் 100வது ரெய்டு - விவேக் வீட்டில் கேக் வெட்டி கொண்டாடிய அதிகாரிகள்

புதன், 15 நவம்பர் 2017 (16:06 IST)
வருமான வரித்துறையினர் விவேக் வீட்டில் சோதனை நடத்திய போது கேக் வெட்டி கொண்டாடியதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


 

 
சசிகலா குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வீடுகளில், ஆபரேஷன் கிளீன் மணி என்ற பெயரில், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் சசிகலா குடும்பத்தினர் பினாமிகள் பெயரில் வாங்கிய சொத்துக்கள், முறைகேடான பணப்பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களும் சிக்கியது.  
 
இதில், இளவரசியின் மகன் விவேக்  மற்றும் மகள் கிருஷ்ணபிரியா ஆகியோரின் வீட்டில் மட்டும் அதிகாரிகள் 5 நாட்கள் தொடர்ந்து சோதனை நடத்தினர். விவேக் வீட்டில் இரவு பகல் என விடாமல் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது  ‘இது  எங்கள் 100வது ரெய்டு’ எனக்கூறி வருமான வரித்துறைகள் கேக் வெட்டி கொண்டாடினார்களாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்