தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை - வானிலை மையம் அறிவிப்பு

வெள்ளி, 22 செப்டம்பர் 2017 (14:14 IST)
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.


 

 
தெலுங்கானா முதல் தென் தமிழகம் வரை காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாகவே மாலை நேரங்களில் வெயில் அதிகமாக உள்ளது. ஆனால், இரவு நேரங்களில் தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.
 
இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்