ஆ.ராசா மிகவும் கீழ்த்தரமாக பேசியிருப்பது கண்டனத்திற்குரியது-டிடிவி. தினகரன்

சனி, 17 செப்டம்பர் 2022 (15:19 IST)
இந்துமதத்தைப் பின்பற்றுபவர்களை இழிவுபடுத்தும் விதமாக தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் திரு.ஆ.ராசா மிகவும் கீழ்த்தரமாக பேசியிருப்பது கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன் திமுக எம்பி ஆ ராசா நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

இதற்கு, எடப்பாடி பழனிச்சாமி உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டித்து வருகின்றனர். இந்த நிலையில் திமுக எம்பி ஆ ராசா இந்து மதத்தை அவமதித்து பேசியதாகவும் அதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை அசோக் நகர் காவல் நிலையத்தில் சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்த் புகார் அளித்துள்ளார். இந்த புகார் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் திமுக எம்பி ஆ ராசா நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவரது இந்த பேச்சை திமுகவினரே ரசிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் திமுக எம்பி ஆ ராசா பேச்சை எடப்பாடி பழனிச்சாமி உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டித்து வருகின்றனர். இந்த நிலையில் திமுக எம்பி ஆ ராசா இந்து மதத்தை அவமதித்து பேசியதாகவும் அதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை அசோக் நகர் காவல் நிலையத்தில் சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்த் புகார் அளித்துள்ளார்.

இந்த  நிலையில் ஆ.ரசாவின் சர்ச்சை பேச்சுக் குறித்து, அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தன் டுவிட்டர் பக்கத்தில், இந்துமதத்தைப் பின்பற்றுபவர்களை இழிவுபடுத்தும் விதமாக தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் திரு.ஆ.ராசா மிகவும் கீழ்த்தரமாக பேசியிருப்பது கண்டனத்திற்குரியது.
 
மத உணர்வுகளைத் தூண்டும் இத்தகைய பேச்சுகளை அனுமதிப்பது சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும்பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நாவடக்கம் தேவை எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்