இருப்பினும், அமமுக கட்சியில் தினகரனின் ஆதரவாளர்கள் தொடர்ந்து செயலாற்றி வருகின்றனர். அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிவிடி தினகரன் தலைமையில் அமமுக சார்பில் நேற்று, திருப்பூரில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்ததது.
இதுகுறித்து டிடிவி தினகரன் தன் டுவிட்டர் பக்கத்தில், பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளில் கழகத்தின் தொழிற்சங்க அமைப்பான இதயதெய்வம் அம்மா தொழிற்சங்க பேரவையின் கொடி, தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூரில் இன்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.