நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. இந்நிலையில் நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகுகின்றன. தமிழகத்தில் 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலின் முடிவுகளால் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் தேர்தல் முடிவுகள் தொடர்பாக திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இதுதொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் முக ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வாக்கு எண்ணிக்கை மையங்களில் திமுக முகவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டியதன் முக்கியத்துவம் உள்ளிட்டவை குறித்து கலந்தோசிக்கப்பட்டது . மேலும் சீல் வைக்கப்பட்டுள்ள வாக்கு எந்திரங்களின் சீல் சரியாக உள்ளதா? என்பதை கட்சியினர் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. எந்திரத்தில் ஏதேனும் சேதாரம் அடைந்தது போன்று காணப்பட்டால் அதில் பதிவான ஓட்டுகளை எண்ணவிடக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.