”சூப்பர்டா மச்சான்..” “யாருடா நீங்கள்லாம்..?” – ஐபிஎஸ் அதிகாரியை அதிர்ச்சிக்குள்ளாக்கிய 2கே கிட்ஸ்!

Prasanth Karthick

வியாழன், 30 மே 2024 (11:22 IST)
இன்ஸ்டாகிராமில் போட்டோ போட்ட ஐபிஎஸ் அதிகாரியை ‘மச்சான்’ என முறை சொல்லி கமெண்ட் போட்ட 2கே கிட்ஸின் சம்பவம் வைரலாகியுள்ளது.



90ஸ் கிட்ஸ்களுக்கு எப்படி பேஸ்புக் பிரபலமான சமூக வலைதளமாக பயன்பட்டு வந்ததோ, அதுபோல தற்போதுள்ள 2கே தலைமுறையினருக்கு இன்ஸ்டாகிராம் உள்ளது. பல பிரபலங்களும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதால் அவர்களை பின்பற்றுவோரும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதை அதிகரித்துள்ளனர். அதேசமயம் இன்ஸ்டாகிராம் கமெண்டுகளில் இளசுகள் செய்யும் லூட்டிகளும் அதிகரித்து வருகிறது.

சில பிரபல நடிகர், நடிகைகள் கமெண்டில் ‘நீங்கள் ஹாய் சொன்னால் நான் தேர்வில் படித்து பாஸ் ஆவேன்’ என சிலர் சொல்ல, அந்த பிரபலங்களும் ஒரு ‘ஹாய்’ சொல்வதும், அது வைரலாவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

முன்னாள் டிஜிபியான ரவியும் இன்ஸ்டாகிராமில் அக்கவுண்ட் வைத்துக் கொண்டு தனது ஆக்டிவிட்டிகளை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் அவ்வாறாக லண்டன் சென்றிருந்த ரவி தனது புகைப்படத்தை பதிவிட்டு ‘வணக்கம் லண்டன்’ என பதிவிட்டிருந்தார்.



அதில் கமெண்ட் செய்த நபர் ஒருவர் “சூப்பர்டா மச்சான் அருமை” என கமெண்ட் செய்துள்ளார். அதை பார்த்து அதிர்ச்சியான ரவி “டேய் யார்ரா நீங்கள்லாம்” என கேட்க, தற்போது அந்த பதிவு வைரலாகியுள்ளது. பலரும் ரிப்ளையில் சென்று ‘அவனை தூக்கி உள்ளப்போடுங்க சார்’ என்று சொல்லி சிரித்து வருகின்றனர்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்