ஐபிஎல் தோத்துடும். செஞ்சுரி பறக்கவிடும் கோடை வெயில்! – 15 இடங்களில் 100 டிகிரியை தாண்டியது!

Prasanth Karthick

திங்கள், 29 ஏப்ரல் 2024 (19:24 IST)
தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் இன்று 15 இடங்களில் வெயிலின் அளவு 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது.



ஏப்ரல் தொடக்கம் முதலே பல இடங்களிலும் வெயில் உக்கிரமான வெப்ப அலைகளை உருவாக்கி மக்களை வதைத்து வருகிறது. மே 4ல் தான் அக்கினி நட்சத்திரம் தொடங்க உள்ளது. ஆனால் அதற்கு முன்னரே பல இடங்களிலும் வெயில் இயல்பை விட அதிகமாக உள்ளது.

இன்று 15 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி வீசியுள்ளது. அதிகபட்சமாக ஈரோட்டில் 108.68 டிகிரி வெயில் வீசியுள்ளது. திருப்பத்தூரில் 107 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. சேலம், வேலூர் பகுதிகளில் 106 டிகிரியும், தருமபுரி, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, திருத்தணி ஆகிய பகுதிகளில் 104 டிகிரியும் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

அடுத்து வரும் நான்கு நாட்களில் வெயில் மேலும் அதிகமாக இருக்கும் என கூறப்பட்டுள்ள நிலையில் மக்கள் அவசியமின்றி மதிய நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்