ராஜேந்திர பாலாஜி டெல்லியில் பதுங்கல்...? அதிமுகவினரிடம் விசாரணை!

செவ்வாய், 28 டிசம்பர் 2021 (10:44 IST)
ராஜேந்திர பாலாஜிக்கு உதவி செய்ததாக அதிமுகவினரிடம் தனிப்படை விசாரணை நடத்தி வருகிறது. 

 
வேலை வாங்கி தருவதாக மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு முன்ஜாமீன் கிடைக்காததை அடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருக்கும் ராஜேந்திர பாலாஜியஒ 8 தனிப்படைகள் அமைத்து போலீஸார் தேடி வருகின்றனர். 
 
இதற்கிடையில் ராஜேந்திர பாலாஜி டெல்லியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. முக்கிய அரசியல் கட்சி பிரமுகர் துணையுடன் அவர் அங்கு இருப்பதாக தெரிகிறது. இதனிடையே ராஜேந்திர பாலாஜிக்கு உதவி செய்ததாக அதிமுகவினரிடம் தனிப்படை விசாரணை நடத்தி வருகிறது. அதிமுக ஐடி பிரிவு துணை செயலாளர் விக்னேஸ்வரன், இளம்பெண் பாசறை செயலாளர் ஏழுமலையிடம் விசாரணை நடை பெறுகிறது என தகவல் வெளியாகியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்