கார்த்திக் சிதம்பரத்துக்கு ஒருநாள் சிபிஐ காவல்

புதன், 28 பிப்ரவரி 2018 (19:56 IST)
கார்த்திக் சிதம்பரத்தை ஒருநாள் காவலில் எடுத்து விசரரிக்க டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய முதலீடு பெற்ற விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக கார்த்திக் சிதம்பரம் உள்பட 5 பேர் மீது குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் கார்த்திக் சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டதையடுத்து சென்னையில் இன்று சிபிஐ கார்த்திக் சிதம்பரத்தை அதிரடியாக கைது செய்தது.
 
கைது செய்த கார்த்திக் சிதம்பரத்தை சிபிஐ டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. கார்த்திக் சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் மற்றும் சிபிஐ தரப்பு இடையே கடுமையான வாக்குவாதம் நடந்தது. இதையடுத்து தற்போது கார்த்திக் சிதம்பரத்தை ஒருநாள் காவலில் எடுத்து விசரரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
இந்திராணி முகர்ஜியின் ஒப்புதல் வாக்குமூலம் மற்றும் பாஸ்கர் ராமன், பண பரிவர்த்தனை குறித்த தகவல்களை உறுதி செய்தது தற்போது இந்த வழக்கில் பெரிய திருப்பமாக அமைந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்