கணக்கில் காட்டாத தங்கம் வைத்திருப்பவர்களுக்கு மன்னிப்பு அளிக்கும் திட்டமா?

வெள்ளி, 31 ஜூலை 2020 (16:04 IST)
கணக்கில் காட்டாத தங்கம் வைத்திருப்பவர்களுக்கு அபராதம் செலுத்தி மன்னிப்பு அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது
 
வரி ஏய்ப்பை தடுக்கவும் கணக்கில் காட்டாத சொத்துக்களுக்கு வரி விதிக்கவும் மத்திய அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது. குறிப்பாக கணக்கில் காட்டாத தங்கத்தை வைத்திருப்பவர்கள் தாங்களாகவே முன்வந்து கணக்குக் காட்டினால் அதற்கான நியாயமான வரி மற்றும் அபராதம் மட்டும் பெற்றுக் கொண்டு சட்ட நடவடிக்கைகளை தவிர்க்கும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது 
 
பொருளாதார பாதிப்பு காரணமாகவும், அமெரிக்க டாலர் மதிப்பு காரணமாகவும் பலரும் தங்கத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை மிக அதிகமாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கணக்கில் காட்டாத தங்கத்தை வெளியே கொண்டுவர எடுக்கப்படும் முயற்சியாகம், கணக்கில் காட்டாத தங்கத்திற்கு அபராதம் மற்றும் வரி விதிக்கும் திட்டம் கொண்டு வரப்படுவதாக கூறப்படுவதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. எனினும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை பொறுமை காப்போம்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்