சென்னை மெட்ரோ திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்: ரூ.63,246 கோடி நிதி ஒதுக்கீடு..!

Siva

வெள்ளி, 4 அக்டோபர் 2024 (07:12 IST)
சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதோடு, ரூபாய் 63,246 கோடி ஒதுக்கீடு செய்யவும் முடிவு செய்துள்ளது.
சென்னையில் ஏற்கனவே முதல் கட்ட மெட்ரோ ரயில் சிறப்பாக இயங்கி வரும் நிலையில், 119 கிலோமீட்டர் தூரத்தில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

மத்திய அரசு மற்றும் தமிழக அரசு சமமாக நிதி கொடுத்து அமைக்கப்படும் இந்த மெட்ரோ ரயில் திட்டம் மூன்று வழித்தடங்களில் 120 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.

மாதவரம் முதல் சிப்காட் வரை முதல் வழித்தடம், லைட் ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரை இரண்டாவது வழித்தடம், மற்றும் மாதவரம் முதல் சோளிங்கநல்லூர் வரை மூன்றாவது வழித்தடம் என மூன்று வழித்தடங்களில் அமைக்க உள்ளது.

இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று சமீபத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்திய நிலையில், தற்போது மத்திய அமைச்சரவை சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து ரூபாய் 63,246 கோடி ஒதுக்க முடிவு செய்துள்ளது.

இந்த தகவலை மத்திய ரயில்வே துறை அமைச்சர் உறுதி செய்துள்ளார். மேலும், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 'சென்னை மெட்ரோ திட்டம் போக்குவரத்தை எளிதாகவும், பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்' என்றும், 'சென்னை நகரின் மக்கள் வாழ்வு எளிதாகும்' என்றும் தெரிவித்துள்ளார்."


Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்