கோவை கொடிசியா வளாகத்தில் ப்ராபர்டி எக்ஸ்போ 2023 கட்டுமான தொழில் கண்காட்சி நடைபெற்றன. இந்த நிலையில், இந்த கண்காட்சியில் கட்டுமான தொழில் துறையினர் ஸ்டால்களை அமைத்திருக்கின்றனர். இதனை வாடிக்கையாளர்கள் மற்றும் தொழில் முதலீட்டாளர்கள் பார்வையிட்டனர். இதில் வீட்டுமனை வர்த்தகம் தொடர்பாக அமைக்கப்பட்ட இந்த ஸ்டாலில், வீட்டுமனை வர்த்தகத்துக்கென்றே உருவாக்கப்பட்ட findmyplots.com வெப்சைட் டிஸ்பிளே செய்யப்பட்டிருந்தது வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்த்திருக்கின்றன.
இது குறித்து அந்த இணையதளத்தின் இயக்குநர் ஆதித்யன் கூறுகையில், findmyplots.com என்ற இணையதளம் ஒரு B2B ( பிசினஸ் டு பிசினஸ் ) PRODUCT ஆகும். எம்ப்ளாயி மேனேஜ்மெண்ட், லே அவுட் மேனேஜ்மெண்ட், லீட் மேனேஜ்மெண்ட் என பக்கங்கள் பிரிக்கப்பட்டிருக்கின்றன. அதிலே வீட்டு மனை அமைந்துள்ள இடத்தின் மேப், வரைபடம், புகைப்படம், வீடியோக்கள், கடன் தரும் வங்கிகள் வரை, மனை பதிவு மற்றும் ஒப்புதல் எண்கள், மனைக்கு அருகாமையிலுள்ள அத்யாவசிய இடங்கள் குறித்த விவரங்கள் என அனைத்தையும் ஒரே இடத்திலிருந்தவாறு இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். மிக முக்கியமாக google மேப்ல் layout வரையப்பட்டு , வாடிக்கையாளர் layout மட்டும் plot குறித்து இந்த இணையதளத்திலே எளிமையாக தெரிந்து கொள்ளலாம் . இதே போன்று முதலீட்டாளர்கள் இந்த இணையதளத்தில் தங்களின் வீட்டுமனை வர்த்தக விவரங்களை பதிவிடலாம்.
இதில் வர்த்தகம் தொடர்பாக நேரடியாக வாடிக்கையாளர்கள், நுகர்வோர் கேள்வி கேட்க முடியும். அதற்கான பதிலை உடனடியா இணையத்தில் பெற முடியும். வீட்டுமனை வாங்குவோர் ஒவ்வொரு வேலைகளுக்கும் பல இடங்களுக்கு, அலுவலகங்களுக்கு சென்று தகவல் தெரிந்துகொள்ள அதிக நேரம் செலவிட நேரிடும். ஆனால் findmyplots.comல் அனைத்து தகவல்களையும் எளிதாக அறியும் வகையில் வடிவமைக பட்டிருப்பதனால், இது கட்டுமான தொழில் துறைக்கு வரப்பிரசாதமாக பார்க்கப்படுகின்றன . வழக்கமான நடைமுறையில் செலவிடும் நேரத்தை விட 5 ல் 1 பங்கு நேரத்தை செலவிட்டாலே இதில் வீட்டுமனை குறித்த அனைத்து தகவல்களையும் அறிய முடியும்.
இந்த இணையதள பயன்பாடு வாடிக்கையாளர்கள், முதலீட்டாளர்களை வெகுவாக ஈர்த்திருக்கின்றன. இப்படிப்பட்ட வீட்டுமனை வர்த்தகத்துக்கு என்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்த இணையதளம் பிளாட் ப்ரோமோட்டர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன என தெரிவித்தனர் . இது இந்தியாவிலேயே முதன் முறையாக வீட்டுமனைக்கென்று உருவாக்கப்பட்ட இணையதளம் என்று நிறுவனத்தார் தெரிவித்தனர்.