ஆட்சிக்கு எதிர்ப்பு வரும்போதெல்லாம் இந்தி எதிர்ப்பை திமுக பேசும்: அண்ணாமலை

சனி, 15 அக்டோபர் 2022 (14:16 IST)
திமுக தனது ஆட்சிக்கு எப்போதெல்லாம் எதிர்ப்பு வருகிறதோ அப்போதெல்லாம் இந்தி எதிர்ப்பை கையிலெடுக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 
 
திமுக இளைஞரணி இன்று இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தி வரும் நிலையில் இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறும்போது திமுக மீது எதிர்ப்பு வந்தால் அக்கட்சியினர் இந்தி எதிர்ப்பை பற்றி பேசுவார்கள்
 
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தமிழ் கட்டாய மொழியாக இதுவரை மாற்றப்படவில்லை. திமுக நிர்வாகிகள் நடத்தும் பள்ளியில் கூட தமிழ் கட்டாயம் இல்லை
 
மத்திய அரசு எந்த இடத்திலும் இந்தி மொழி கட்டாயம் என பேசவில்லை.புதிய கல்விக் கொள்கையில் மொழிக் கொள்கையை கடைபிடிக்கும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்