கடலூர் மாவட்டம் பண்ருட்டி மேலம்பாளையத்தைச் சேர்ந்தவர் சிற்றரசு (75). இவரது மனைவி ராஜலட்சுமி, இவர்களுக்கு அருள்வேல் என்ற மகன் உள்ளார். இவர் சென்னையில் உள்ள ஐ டி நிறுவனத்தில் வேலைசெய்து மாதம் லட்ச ரூபாய் சம்பளம் பெற்றுவந்துள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு அருள்வேல், திவ்யா என்ற பெண்ணை மணந்துகொண்டார். இந்த தம்பதிக்கு 3 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. அருவேலுக்கு ஆன்லைன் சீட்டாட்டத்திற்கு அடிமையானதாக தெரிகிறது. இவ்விளையாட்டில் சுமார் 50 லட்சத்திற்குமேல் கடன்பட்டுவிட்டார்.