வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் விஜயபாஸ்கர்: வருமான வரித்துறை மிரட்டுவதாக பரபரப்பு புகார்!

வெள்ளி, 7 ஏப்ரல் 2017 (12:47 IST)
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம் உட்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
இது அரசியல் காரணத்துக்காக நடத்தப்படும் சோதனை என முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் கூறினார். மேலும் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் எந்த ஆவணமும் சிக்கவில்லை எனவும், இதனால் வருமான வரித்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை மிரட்டுவதாக பரபரப்பு புகாரை கூறினார் தளவாய் சுந்தரம்.
 
இதனையடுத்து விஜயபாஸ்கரின் வீட்டின் முன்னர் தளவாய் சுந்தரம் உள்ளிட்ட கட்சியின் தொண்டர்கள் பலர் குவிந்தனர். அங்கிருந்த காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அராஜகமாக உள்ளே நுழைந்தார் தளவாய் சுந்தரம். ஆனால் உள்ளே விஜயபாஸ்கார் வீட்டின் உள்ளே துணை ராணுவப்படை பாதுகாப்புக்கு உள்ளதால் அங்கு அவர் அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகிது. தமிழக காவலர்கள் வீட்டிற்கு உள்ளே அனுமதிக்கப்படாமல் வீட்டிற்கு வெளியே தான் உள்ளனர்.
 
இந்நிலையில் சற்றுமுன்னர் வீட்டின் உள்ளே இருந்து தனது மகளுடன் வெளியே வந்து ஆதரவாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், அமைதியாக இருக்க வலியுறுத்தினார். காலையில் இருந்தே சோதனை செய்து வருவதாகவும், தான் சோதனைக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து வருகிறேன் எந்தவித ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை. காலையில் ஆறு மணிக்கு இருந்து என்னை எழுப்பி மனைவி மகள் என யாரையும் பள்ளிக்கு செல்ல விடாமல் தடுத்துள்ளனர் என புகார் கூறினார். வீட்டிலேயே இருக்க வைத்துள்ளனர், தான்னை ஒரு அமைச்சர் என்று கூட பார்க்காமல் துன்புறுத்துகிறார்கள் என குற்றச்சாட்டு வைத்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்