63வது மாநில அளவிலான கேரம் சாம்பியன்சிப் போட்டிகள் துவக்க விழா

வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (20:47 IST)
கரூர் பரணி பார்க் பள்ளியில்  இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறும் 63வது மாநில அளவிலான சப்ஜூனியர், கேடட் கேரம் சாம்பியன்சிப் போட்டிகள் துவக்க விழா இன்று காலை நடைபெற்றது .
 
துவக்க விழா நிகழ்ச்சிக்கு கரூர் மாவட்ட கேரம் சங்க சேர்மனும் பரணி கல்விக் குழும தாளாளருமான  எஸ்.மோகனரங்கன் தலைமை தாங்கினார். 
 
கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாநில கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகளை சம்பிரதாய முறைப்படி துவக்கி வைத்தார். 
 
இந்நிகழ்ச்சியில் தமிழக சுண்டாட்டம் சங்க மூத்த துணைத் தலைவர் சிவக்குமார், மாநில பொதுச்செயலாளர் ‘அர்ஜூனா விருதாளர்’ ‘இரு முறை முன்னாள் உலக சாம்பியன்’ மரிய இருதயம், மாநில கேரம் சங்க துணைத் தலைவரும், மாவட்ட தலைவரும்,  பரணி கல்விக்குழும முதன்மை முதல்வருமான முனைவர் ராமசுப்பிரமணியன், மாநில பொருளாளர் கார்த்திகேயன், பரணி கல்விக் குழும அறங்காவலர் சுபாஷினி, போட்டியின் தலைமை நடுவர் ஆல்வின் செல்வகுமார், தெற்கு மண்டல செயலாளர் சிவகுமார், கரூர் மாவட்ட செயலர் சுரேஷ், கரூர் மாவட்ட துணைத் தலைவர்கள்  முகம்மது கமாலுதீன், சுதாதேவி, சேகர், மாவட்ட பொருளாளர் செந்தில்குமார், மாவட்ட இணைச் செயலர் ஜீவா உள்ளிட்ட மாநில, மாவட்ட கேரம் சங்க நிர்வாகிகள் துவக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
 
தொடர்ந்து அக்டோபர் ஒன்றாம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் 63வது மாநில சுண்டாட்ட போட்டியில் கரூர் திருச்சி, தஞ்சாவூர், ஈரோடு, கோயமுத்தூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 400 மாணவர்கள் பங்கு பெற்று விளையாடி வருகின்றனர். 
 
அக்டோபர் 1ம் தேதி  மாலை 4 மணிக்கு 63வது மாநில சப் ஜூனியர், கேடட் கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழக கேரம் சங்க மாநில தலைவர் நாசர் கான் தலைமையில் பரிசளிப்பு விழா நடைபெற உள்ளதாக போட்டி ஏற்பட்டாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்