பல்வேறு கட்ட அரசியல் பரபரப்புகளுக்கு இடையே சில நாட்களுக்கு முன் ரஜினிகாந்த், வியாழன் அன்று சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா மண்டபத்தில் மாவட்ட செயலாளர்களை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.
மேலும், இந்த முறை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் , கட்சி தொடங்குவதைப் பற்றி ஆலோசனை செய்யவுள்ளாதாகவும், அதேபோல், அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தல் பற்றி பேச வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
அதன்படி ரஜினிகாந்த், கோடம்பாக்கத்தில் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில், ரஜினி மக்கள் மன்றம் மாவட்ட செயலர்களுடன் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து, ஆலோசனை நடத்தினார். அபோது அவர்களுக்கு ரஜினி பல ஆலோசனைகளுக்கு நிர்வாகிகளுக்கு வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
அப்போது அவர் கூறியதாவது, ஓராண்டுக்கு பிறகு கட்சி தொடங்குவது குறித்து நிர்வாகிகளைச் சந்தித்து பேசினேன். ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசியதில் எனக்கு திருப்தியாக இருந்தது. ஆனால் தனிப்பட்ட விஷயத்தில் எனக்கு திருப்தி இல்லை.எனக்கு ஏமாற்றம் இருந்தது. அது என்னவென்று இப்போது கூற முடியாது. நேரம் வரும்போது கூறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.