சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா மற்றும் அவரின் உறவினர்கள் இளவரசி, திவாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, அவர்கள் மூவரும் தற்போது பெங்களூர் பரப்பன அக்ராஹர சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் சசிகலாவும், இளவரசியும் ஒரே அறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சிறையில் வாடும் இளவரசி நீரிழிவு நோய், ரத்த சோகை, ரத்த அழுத்தம் ஆகிய பாதிப்புகளால் அவதிப்பட்டு வருகிறார் எனத் தெரிகிறது. எனவே இதற்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க அனுமதிக்க வேண்டும் என இளவரசி தரப்பில் சிறைத் துறை நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், அவரின் கோரிக்கையை சிறைத் துறை நிர்வாகம் நிராகரித்து விட்டது. மேலும், சிறையில் உள்ள மருத்துவமனையிலேயே சிகிச்சை எடுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டதாம். இதனால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியாத சூழ்நிலையில் இளவரசி தவிக்கிறாராம்.