இந்நிலையில் நேற்று இரவில் ஜெயலலிதாவின் தோழி சசிசலாவுக்கு கார் வழங்கிய அதிமுக நிர்வாகிகள் 7 பேர் அக்கட்சியிலிருந்து தற்போது அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.
அதில், சூளகிரி கிழக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் எஸ்.ஆர். சம்மங்கி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், சசிகலாவுக்கு கட்சிக் கொடியுடன் கார் வழங்கியவர் வரவேற்பு அளித்தவர்கள் என மொத்தமாக 7 பேர் அதிமுக அடிப்படை உறுப்பினர்கள் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
இந்நிலையில், இன்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன், அதிமுகவில் ஸ்லீப்பர் செல்கள் இருப்பதாகத் தெரிவித்தார். நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சசிகலா, அன்புக்கு நான் அடிமை; அடக்குமுறைக்கு நான் அடிபணிய மாட்டேன்; விரைவில் எல்லோரையும் சந்திக்கிறேன்… அதிமுக, அமுமவின் பொது எதிரியை வீழ்த்துவதே எங்கள் லட்சியம் எனவும் தெரிவித்தார்.