பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிமுக அதிரடியாக அறிவித்த நிலையில் தமிழக அரசியல் தலைமை முற்றிலும் மாறிவிட்டது. திமுக ஆட்சி மீது அதிருப்தி இருப்பதால் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் எதிர்க்கட்சி கூட்டணி திடீரென இரண்டாக உடைந்தது திமுகவுக்கு சாதகமாகவே பார்க்கப்படுகிறது.
அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, தமாக மற்றும் சில சிறிய கட்சிகள் ஒன்று சேர்ந்தது திமுக கூட்டணியை எதிர்த்தால் கண்டிப்பாக பாதிக்கு பாதி வெற்றி இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கணித்து இருந்தனர். ஆனால் அந்த கணிப்பை பொய்யாக்கும் வகையில் அதிமுக பாஜக பிரிந்துவிட்ட நிலையில் தந்தி டிவி தற்போது எடுத்துள்ள கருத்துக்கணிப்பில் திமுகவுக்கு 45 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும் அதிமுக கூட்டணிக்கு 33 சதவீதமும் பாஜக கூட்டணிக்கு 13 சதவீதமும் கிடைக்கும் என்றும் கணித்துள்ளது.