தற்போது நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்கள் இயங்கி கொண்டிருக்கின்ற நிலையில் அந்த ரயில்களை சென்னையில் உள்ள ஐசிஎப் நிறுவனம்தான் குறைந்து செலவில் வடிவமைத்து கொடுத்தது. ஆனால் புதிய வந்தே பாரத ரயில்களை உருவாக்குவதற்கு வெளிநாட்டு நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்பட்டிருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது ஓடும் வந்தே பாரத் ரயில்களை குறைந்த செலவில் ஐ.சி.எப். உருவாக்கிய நிலையில், புதிய ரயில்களை தயாரிக்க வெளிநாட்டு நிறுவனத்துடன் ஏன் ஒப்பந்தம் செய்ய வேண்டும்? என ஐ.சி.எப் ஊழியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.