கவரிங் நகை வைத்து கடன் பெற்றவர்களுக்கு எப்படி தள்ளுபடி செய்ய முடியும்: அமைச்சர் ஐ பெரியசாமி

வியாழன், 30 டிசம்பர் 2021 (13:19 IST)
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை வாங்கிய அனைத்து நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த நிலையில் தற்போது 25 சதவீத நகைக் கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்வதற்கு தகுதியானவை என அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இது குறித்து காட்டமாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் அறிக்கை விட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இது குறித்து விளக்கமளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி அவர்கள் ஒரு வீட்டில் உள்ள ஐந்து பேர்கள் திட்டமிட்டு ஒவ்வொருவரும் 5 சவரன் நகை கடன் பெற்றுள்ளனர் என்றும், அந்த கடன்களை எப்படி தள்ளுபடி செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பினார் 
 
அதேபோல் கவரிங் நகைகளை வைத்தும், நகையை இல்லாமலும் மோசடி செய்தும் பலர் கடன் பெற்று உள்ளனர். அம்மாதிரியான கடன்களை எப்படி தள்ளுபடி செய்ய முடியும் என்று ஐ பெரியசாமி தெரிவித்துள்ளார்
 
கடன் தள்ளுபடி விஷயத்தில் ஆய்வு செய்து உண்மையான பயனாளிகளுக்கு மட்டுமே கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் பெரியசாமி விளக்கமளித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்