எனக்கு தகுதி கிடையாதுதான்! - விஜயகாந்த் ஓபன் டாக் [வீடியோ]

வியாழன், 21 ஏப்ரல் 2016 (12:36 IST)
எனக்கு முதலமைச்சர் ஆவதற்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்கிறார்கள். எனக்கு தகுதி இல்லைதான் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
 

 
தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா சார்பில் சேலம் மாவட்டம், வாழப்பாடியில் வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார்.
 
அப்போது பேசிய விஜயகாந்த், ”எதிரிகளை மன்னித்தாலும், துரோகிகளை நான் மன்னிக்கவே மாட்டேன். விஜயாகாந்திற்கு முதல்வராவதற்கு என்ன தகுதி இருக்கிறது எனக் கேட்கிறார்கள். எனக்கு ஒன்றுமில்லைதான்.
 
ஆனால், உங்களைப் போன்று என்னால் கொள்ளை அடிக்க முடியாது. திமுக, அதிமுக போல என்னால் கொள்ளை அடிக்க முடியாது. அந்த தகுதி உங்களிடம் உள்ளது என்னிடம் இல்லை” என்று கூறினார்.
 
வீடியோ இங்கே:
 
 


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்...

வெப்துனியாவைப் படிக்கவும்