இந்தியா கூட்டணியில் உள்ள திமுக கூட்டணியில் மதிமுக, விசிக , கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. இந்த நிலையில், திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
அப்போது அவர் கூறியதாவது: ''நான் சீட்டிற்காக வரவில்லை. நாட்டிற்காக வந்துள்ளேன். திராவிட மாடலை பின்பற்றினால் இந்தியாவின் நுழைவுவாயிலாக தமிழ் நாடு இருந்திருக்கும். உங்கள் மனங்களிலும் எனக்கும் இடமுண்டு. உங்கள் இல்லங்களிலும் எனக்கு இடமுண்டு என்பதை அறிவேன். தமிழ் நாடு மக்களுக்கும் இந்தியாவுக்கும் எனக்கும் உள்ள காதல் சாதாரணமான காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது'' என்று கூறினார்.