பிரியாணி சாப்பிட்ட இயக்குனர் ரஞ்சித் பலி! – சென்னையில் பரபரப்பு!

திங்கள், 24 ஜனவரி 2022 (10:22 IST)
சென்னையில் குடிபோதையில் பிரியாணி சாப்பிட்ட இயக்குனர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வியாசர்பாடி ரத்தினம் தெரு பகுதியை சேர்ந்த குறும்பட இயக்குனர் ரஞ்சித். ஒரு சில குறும்படங்களை இயக்கியுள்ள இவர் பட வாய்ப்புக்காக காத்திருந்துள்ளார். சமீபத்தில் ரஞ்சித் மது அருந்தியுள்ளார்.

பின்னர் மது போதையுடனே பிரியாணி வாங்கி சாப்பிட்டுள்ளார். பிரியாணி சாப்பிட்ட சில மணி நேரத்தில் ரஞ்சித் மயங்கியுள்ளார். இதனால் அவரை மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் ரஞ்சித்தின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பிறகே அவர் இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்