இதனால், பவானியை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். அதன்படி கடந்த 18ஆம் தேதி மாலை பவானியை கோவிலுக்கு செல்வதாக கூறி, அழைத்து சென்றுள்ளார். கோவில் பூட்டிப்பட்டு கிடந்ததை அடுத்து, அருகே இருந்த குளக்கரைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு அவருடன் உல்லாசமாக இருக்க முயன்றுள்ளார். செந்தில்குமார் மது அருந்தியிருப்பதை தெரிந்து கொண்ட பவானி, அதற்கு இணங்க மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த செந்தில் ஏற்கனவே மறைத்து வைத்திருந்த கயிறை எடுத்து, பவானியின் கழுத்தை சுற்றி இறுக்கி கொன்றுள்ளார். பின்னர் குளத்தில் தூக்கு எறிந்துள்ளார்.
இந்நிலையில், குளத்தில் பிணமாக கிடந்த பவானியை காவல் துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் செந்தில்குமார் சிக்கி கொண்டுள்ளார்.