டிராஃபிக் போலீஸின் நகைச்சுவை விழிப்புணர்வு வீடியோ வைரல்

வியாழன், 20 அக்டோபர் 2022 (19:16 IST)
கோவை மாவட்டம் லஷ்சுமி மில்ஸ் பகுதியில் டிராஃபிக் போலீஸ் ஒருவர்    நகைச்சுவை பேச்சின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோ வைரலாகி வருகிறது.
 

கோவை மாவட்டம் லட்சுமி மில்ஸ் என்ற பகுதியில் உள்ள ட்ராஃபிக் சிக்னலில் ஒரு டிராஃபிக் போலீஸ்  இன்று சாலை விழிப்புணர்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது, வாகனத்தில் அமர்ந்திருந்த ஒருவர் சிரிப்பதைப் பார்த்த அவர், நல்ல சிரிக்கிற ராஜா என்றும், ஒரு பைக்கில் 3 பேர் அமர்ந்திருப்பதைப் பார்த்த அவர் அப்பா, அம்மாவுக்கு தெரியாம வண்டிய தூக்கிட்டு வந்திடறீங்க , டே பொடியா ஹெல்மெட்  போடுடா என்று கூறினார்.

இவரது நகைச்சுவை கலந்த விழிப்புணர்வு வாகனம் ஓட்டுபவர்களுக்கு சிரிப்பை வரவழைத்தது. இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்