தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐரோப்பிய நாடுகள் சென்று திரும்பினார்.
தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 30ம் தேதி பயணம் செய்தார். பல்வேறு நிறுவனங்களுடன் முதலீடு ஒப்பந்தங்களை மேற்கொண்ட அவர், முல்லை பெரியாறு அணை தந்த பென்னிகுயிக் குடும்பத்தினரையும் சந்தித்தார்.
முதலீடு பயணம் முடித்து திரும்பி வந்த அவரை திமுக அமைச்சர்கள், தொண்டர்கள் வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளில் வேற்றிகரமாக முதலீடுகளை ஈர்த்து மனநிறைவுடன் திரும்பி இருக்கிறேன். தமிழ்நாட்டில் முதலீடு செய்ய பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. பல நிறுவனங்கள் நம்பிக்கை வைத்து முதலீடு செய்துள்ளன.
தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா துடிப்பானவர் என்பதை இந்த பயணத்தில் நிரூபித்துள்ளார். முதலீடுகளை ஈர்க்கும் வெற்றிப் பயணத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் சிலர் புலம்பி வருகின்றனர்” என்று கூறியுள்ளார்.
Edit by Prasanth.K