12 நாட்கள் பொது முடக்கம்: என்னென்ன இயங்கும்? என்னென்ன இயங்காது?

வியாழன், 18 ஜூன் 2020 (15:46 IST)
நாளை முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை என்னென்ன இஅங்கும்? என்னென்ன இயங்காது என்பதன் தொகுப்பு இதோ... 
 
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகம் இருப்பதை அடுத்து இந்த நான்கு மாவட்டங்களிலும் ஜூன் 19 ஆம் தேதி முதல் அதாவது நாளை 30 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும். 
 
இந்த முழு ஊரடங்கில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் தற்போது சென்னையில் இன்று நள்ளிரவு முதல் யாரும் வாகனங்களில் வெளியே வரகூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 
12 நாட்களில் என்னென்ன இயங்கும்? என்னென்ன இயங்காது? 
மருத்துவமனை, மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகளுக்கு தடையில்லை. 
 
வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன இயக்கத்திற்கு அனுமதி இல்லை, மருத்துவ தேவைகளுக்கு மட்டும் அனுமதி.
 
தலைமைச் செயலகம், சுகாதாரம், வருவாய் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலகங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் இயங்கும்.
 
மத்திய அரசு அலுவலகங்களும் 33 சதவீத ஊழியர்களோடு செயல்படலாம். 
 
வரும், 29, 30 ஆகிய 2 நாட்கள் மட்டும் 33 சதவீத பணியாளர்களுடன் வங்கிகள் செயல்பட அனுமதி 
 
பொது விநியோக கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும். 
 
காய்கறி, மளிகை கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகள் சமூக இடைவெளியோடு காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும். 
 
காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய நடமாடும் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 
 
2 கிலோ மீட்டர் தொலைவுக்குள் உள்ள கடைகளிலேயே அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொள்ள அறிவுறுத்தல்.
 
உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல் மட்டும் வழங்க அனுமதி.
 
தேநீர் கடைகளுக்கு அனுமதி கிடையாது, உணவுப்பொருட்களை டோர் டெலிவரி செய்ய அனுமதி.
 
முதியோர், மாற்றுத்திறனாளி, ஆதரவற்றோர் இல்லங்கள் தொடர்ந்து இயங்க அனுமதி. 
 
அம்மா உணவகங்கள் மற்றும் ஆதரவற்றோருக்கான சமையல் கூடங்கள் தொடர்ந்து செயல்படும்.
 
அச்சு மற்றும் மின்னணு ஊடங்கள், நீதித்துறை மற்றும் நீதிமன்றங்கள் இயங்கலாம். 
 
சரக்கு போக்குவரத்திற்கும், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்களுக்கும் தடையில்லை.
 
திருமணம், மருத்துவம், இறப்பு ஆகிய காரணங்களுக்காக இ-பாஸ் வழங்கப்படும்.
 
ஞாயிற்றுக்கிழமைகளும் எந்தவித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்