டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பது எப்படி? – மதுரையில் விழிப்புணர்வு கண்காட்சி!

சனி, 30 செப்டம்பர் 2023 (19:20 IST)
மதுரை வலையங்குளத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு கண்காட்சி நடைபெற்றது.
 



மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட வலையங்குளம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று மத்திய அரசின் ஆயுஷ்மான் பவத் திட்டத்தில் படி இன்று சுகாதாரத் திருவிழா நடைபெற்றது. இந்த சுகாதாரத் திருவிழாவில் கர்ப்பிணி பெண்களுக்கு இலவசமாக ஸ்கேன் பரிசோதனை இசிஜி பரிசோதனை, வயதான முதியவர்கள் மற்றும் மூதாட்டிகளுக்கு ரத்த அழுத்தம் சக்கரை நீரழிவு போன்ற நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இந்த முகாமில் வலைய குளத்தை சுற்றியுள்ள பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

முக்கியமாக டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவி வருவதால் டெங்கு காய்ச்சல் எப்படி எப்படி பரவும் என்று மருத்துவத்துறை அதிகாரிகள் கண்காட்சி ஏற்பாடு செய்திருந்தனர். ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரும் பொது மக்களுக்கு டெங்கு எப்படி பரவக்கூடும் என்றும் பரவாமல் தடுப்பதற்கு நாம் வீட்டில் என்னென்ன செய்ய வேண்டும் என்று மருத்துவர் அதிகாரிகள் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர்.

கர்ப்பிணி பெண்கள் மழைக்காலங்களில் என்னென்ன உணவுகள் சாப்பிட வேண்டும் என்றும், தினை, கேழ்வரகு போன்ற தானியங்களால் கொழுக்கட்டை சீடை போன்று செய்து வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு இதை தினந்தோறும் சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்